Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

புலம்பல்கள் ……….

நீண்ட நாட்களாக எனது வேலை/தொழில் பற்றி  எழுதலாம் என்று எண்ணம்..
ஒரே ஒரு சின்ன தயக்கம் தான் … நம்மள பத்தி 4 பேர் நல்லவிதமா சொல்ல மாட்டாங்க .. but  நாமளே …எப்படின்னு …..

மனதில் இருக்கும் பக்கங்கள் /புலம்பல்கள்….

1) MBA  படிப்பும் அதன் மானக் கேடுகளும் ….( கற்றது தமிழ் மாதிரி; கற்றது MBA..)
2)கையில பை; கழுத்துல டை ; வாய்ல பொய்..

சிபு சோரன் ….

தமிழில் உள்ள மிக சிறந்த பத்து கெட்ட வார்த்தைகளுக்கும் பொருத்தமானவர்…

காங்கிரஸ் ….இன்னும் இரண்டு கெட்ட வார்த்தைகளை சேர்த்து கொள்ளலாம் .
இது போன்ற அவமான சின்னங்களை வளர்த்து விட்டதற்கும் ; வளர்த்து கொண்டிருப்பதற்கும் ….

இது அரசாங்கம்

தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் அனைத்து  வகை வெளிநாட்டு மது வகைகளும் அனுமதிக்கப்படும்.— தமிழக அரசுக்குறிப்பு

தமிழ்நாட்டில் மத்திய அரசால் நடத்தப்படும் நவோதய பள்ளிகளுக்கு இந்த வருடமும் அனுமதி இல்லை.
- தமிழக அரசுக்குறிப்பு .

வேர் ..

இந்த நகரத்திலும் ..
சற்று நல்லவனாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
யாருக்கேனும் விபத்தில் அடிபட்டாலும் கூட
இன்னமும் கவலை பட்டு கொண்டிருக்கிறேன்…
தொலைத்து விடவில்லை …
எனது கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றை..

எதை தேடி???

மலர்ந்து நிற்கும் அம்மா
பெரு மகிழ்ச்சியடையும் அப்பா..
நேசத்துடன் நலம் விசாரிக்கும் சொந்தங்கள்..
கால் சுற்றியே வரும் ரோசி …..
நூறு கதைகள் வைத்துக்கொண்டு காத்திருக்கும் கிராமம்..
எப்பொழுதாவது தான் செல்ல முடிகிறது…
எதை தேடி கொண்டிருக்கிறேன் என்று
தெரியவில்லை இந்த நகரத்தில்…..

அம்மா..

கால் தூக்கியே நிற்கும்
யாளி போன்று
தீராப் பாசத்துடன்
அம்மா..

************

நாலு வார்த்தை பேசினால்
ஒன்று.. நல்லா சாப்பிடுப்பா ….
அடுத்து ..உடம்ப பார்த்துக்கோ..
உனக்கு , பிள்ளைகளை தவிர வேறொன்றும் தெரியாதா அம்மா ??

நீ

நீயும் நானும் நடந்து சென்ற
பாதை அப்படியே உள்ளது ..நீண்டதாய் .. முடிவற்றதாய் …
இன்றும் மழை தூறி கொண்டு தான் இருக்கின்றது …
தேடி கொண்டிருக்கிறேன் நாம் விட்டு சென்ற சுவடுகளை..
*********

கை மூடி திறக்கும் பொழுதெல்லாம்
கசிந்து கொண்டிருக்கிறது ..
உன்னை பற்றிய ஏதேனும் ஒரு நினைவு…

*********

அழைத்து ,மறுத்து சிரித்து பழகிய
உன் ஓசை மட்டும் ஒலித்து கொண்டிருக்கிறது ……

************
வெளியேறிய காற்றில் கரைந்து  சென்றாய்
அழகியதொரு சங்கீதமாய்…
வாசித்து முடிந்தபின் வெறும் துளைகள்
மட்டும் கொண்டதாய்  எனது புல்லாங்குழல்..

*************

விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது மழை..
உனது நினைவுகளும்…

**********

சுப்ரமணியபுரம் …..
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு clean slate film. அமைதியாய் ஆரம்பித்து முடிவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்…ஜெய்யின் மைனர்தனங்கள், ஒரு சில பார்வைகளிலேயே வில்லத்தனம்  காட்டும் சமுத்ரகனி  இருவரும் மிகப்பெரிய பிளஸ் ..கஞ்சா கருப்புக்கு நிச்சயம் ஒரு மைல்கல்…
இளையராஜா  வின்  background  பாடல்களில்  கண்களில் கவிதை  பாடி செல்லும் கதாநாயகி … ( இப்பொழுதெல்லாம்  அந்த தாமரை பூ  டாலர்  வைத்த  செயின்  யாரும்  செய்வதில்லையா  இல்லை  யாரும்  அணிவதில்லையா ??)..  அழகு ….

பரமனாக வரும்  டைரக்டர் ….பாரதிராஜாவிடம் இருந்து  வந்த இயக்குனர்களை  போல ; இப்பொழுது பாலாவிடம் இருந்து …  கிளைமாக்ஸ்  ஆக்ரோஷம் , மனதில்  அறைகிறது ……( எப்படி நம்ம சென்சார்ல  விட்டாங்க …)..மிகக்  கனமானதொரு  அமைப்பு ….
கண்கள் இரண்டால் …. அழகானதொரு  கவிதையும்  நல்ல இசையும்  சேர்ந்த  சிறப்பு .. ( இளையராஜா  எங்கே  என்று  தேட  வைக்கிறது ….) …
பரமா, அடுத்த படம் எப்போ …..??

 
உளியின் ஓசை:
Field out ஆனா அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் ?? அதுக்கும் மேல படம்  ஆளும் கட்சியின் அன்பு  கட்டளைக்காக  திரையிடப்பட்டால் ???????
பேசாம  சம்மட்டி  ஓசை!! னு பேர் வெச்சு இருக்கலாம் ….. trailer எ தாங்க முடியல …….தமிழின தலைவரே , விட்ருங்க ப்ளீஸ் …..

இதோ வந்துவிட்டது அடுத்த திருவிழா…
ஒரு மணி நேரமா ? இல்லை பதினைந்து நிமிடங்களா ? எனப் பல்வேறு யூகங்கள். ஒரு நிமிடமே வந்தாலும் ரோபோ வரை தாங்கும்.. ( ஷங்கர் படம்…. தலைவர்க்கு மட்டும் அல்ல .. ஷங்கருக்கே தெரியாது.. எப்போ ரிலீஸ் என்று ..பார்க்கலாம்..atleast  ஸ்டில் வரும்ல …….). ஆனாலும் தலைவர் அநியாயத்துக்கு இளமையாய் தெரிகிறார்..
நீலாம்பரி சொன்னது போல் ” இன்னும் ஸ்டைல் மட்டும் குறையவில்லை”..
பாட்டு ok  ரகம் தான்.. .but சாய்மீரா வின் வியாபார தந்திரம்.. FM களால் ஹிட் போல தோற்றுவிக்க படுகிறது.. ( தேவா இன்னும் சிறப்பாக செய்திருப்பாரோ ?)
ஆனாலும் திரைஅரங்குகளில் தலைவர் படங்களில் பாடல்கள் கேட்கபடுவதில்லை …. பார்க்கப்படுகிறது….. so,  பல once more  நிச்சயம் ……..

அர்விந்த் கிருஷ்ணா.. செல்வராகவன் படங்களில் முக்கியமானதொரு அங்கம்.. நிச்சயம் தலைவரை புதியதொரு angle லில் காட்டி இருப்பார்…

p. வாசு … அவர விட்டு வெளிய வாங்க தலைவா….( போற போக்க பார்த்தா அவர் மகன் நடிக்கிற(??) படத்துல guest ரோல் பண்ண சொன்னாலும் சொல்லுவார்..)

திரும்பவும் ஆரம்பிக்கலாம் 1996 இன் அரங்கேற்றங்கள்.. கைகெட்டும் தூரத்தில் தேர்தலை வைத்து கொண்டு படம் வருவது தலைவருக்கு மிக பெரிய சங்கடம்… கொடி உள்ள கட்சி எல்லாம் ஆதரவு எங்களுக்கே என கொடி பிடிக்கும்.. தலைவர தமிழ்நாடுல கொஞ்ச நாளைக்காவது இருக்க விடுங்கப்பா.. திரும்பவும் இமய மலைக்கு வேண்டாம்…

சஞ்சய் சொன்னது போல,   குசேலன் stills மட்டுமே 3 தலைவர் படம் பார்த்த மாதிரி இருந்தது….

வாங்க தலைவா …. காத்திருக்கிறது தமிழ்நாடு ……………..

வயசானாலும் தலைவருக்கு நக்கல் குறையல.. .. but முதல்அமைச்சர் என்ற கண்ணியம் காக்கவாவது பெருமாளை விட்டு வைக்கலாம். சேது விவகாரம் ok.. but  நமீதா (தா தா!!!! ) வுக்காக கொஞ்சம் toomuch…

( பெருமாள் பட கேசட் ரிலீஸ் விழாவில் நமது முதல் அமைச்சர் நமீதா அடிய பாடலை பார்த்து விட்டு அடித்த கமெண்ட் …. ” அந்த பெருமாள் (கடவுள்!!??) எப்பவும் இப்படித்தான்..இது மாதிரி டான்ஸ் எல்லாம் பார்பர்….” எனவே படத்திற்கு பெயர் சரிதான்.. )

பழைய பதிவுகள் »

Follow

Get every new post delivered to your Inbox.