சுப்ரமணியபுரம் …..
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு clean slate film. அமைதியாய் ஆரம்பித்து முடிவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்…ஜெய்யின் மைனர்தனங்கள், ஒரு சில பார்வைகளிலேயே வில்லத்தனம் காட்டும் சமுத்ரகனி இருவரும் மிகப்பெரிய பிளஸ் ..கஞ்சா கருப்புக்கு நிச்சயம் ஒரு மைல்கல்…
இளையராஜா வின் background பாடல்களில் கண்களில் கவிதை பாடி செல்லும் கதாநாயகி … ( இப்பொழுதெல்லாம் அந்த தாமரை பூ டாலர் வைத்த செயின் யாரும் செய்வதில்லையா இல்லை யாரும் அணிவதில்லையா ??).. அழகு ….
பரமனாக [...]
ஜூலை, 2008 க்கான தொகுப்பு
சினிமா சினிமா ….
Posted in கருத்து கந்தசாமி on ஜூலை 30, 2008 | Leave a Comment »
குசேலன் ….வந்துடோம்ல…
Posted in கருத்து கந்தசாமி on ஜூலை 28, 2008 | Leave a Comment »
இதோ வந்துவிட்டது அடுத்த திருவிழா…
ஒரு மணி நேரமா ? இல்லை பதினைந்து நிமிடங்களா ? எனப் பல்வேறு யூகங்கள். ஒரு நிமிடமே வந்தாலும் ரோபோ வரை தாங்கும்.. ( ஷங்கர் படம்…. தலைவர்க்கு மட்டும் அல்ல .. ஷங்கருக்கே தெரியாது.. எப்போ ரிலீஸ் என்று ..பார்க்கலாம்..atleast ஸ்டில் வரும்ல …….). ஆனாலும் தலைவர் அநியாயத்துக்கு இளமையாய் தெரிகிறார்..
நீலாம்பரி சொன்னது போல் ” இன்னும் ஸ்டைல் மட்டும் குறையவில்லை”..
பாட்டு ok ரகம் தான்.. .but சாய்மீரா வின் வியாபார [...]
கருணாநிதியும் பெருமாளும் …
Posted in கருத்து கந்தசாமி on ஜூலை 28, 2008 | Leave a Comment »
வயசானாலும் தலைவருக்கு நக்கல் குறையல.. .. but முதல்அமைச்சர் என்ற கண்ணியம் காக்கவாவது பெருமாளை விட்டு வைக்கலாம். சேது விவகாரம் ok.. but நமீதா (தா தா!!!! ) வுக்காக கொஞ்சம் toomuch…
( பெருமாள் பட கேசட் ரிலீஸ் விழாவில் நமது முதல் அமைச்சர் நமீதா அடிய பாடலை பார்த்து விட்டு அடித்த கமெண்ட் …. ” அந்த பெருமாள் (கடவுள்!!??) எப்பவும் இப்படித்தான்..இது மாதிரி டான்ஸ் எல்லாம் பார்பர்….” எனவே படத்திற்கு பெயர் சரிதான்.. )
நானாக
Posted in கிறுக்கல்கள், குறிச்சொல் இடப்பட்டது tamil poems, tamil poetry on ஜூலை 28, 2008 | 1 மறுமொழி »
என் கைவிட்டு தவறிய
பந்து உருண்டு உருண்டு
செல்கிறது
மீண்டும் கிடைக்கவே கிடைக்காத
பாதாளத்தில்.
இன்றும் வந்து செல்கிறது
இரண்டு சூரியன்…
விழும் கதிர்கள் என்னை
மட்டும் ஊடுருவி
என் நிழலாய்.
எனக்குள் நீ
Posted in கிறுக்கல்கள், குறிச்சொல் இடப்பட்டது muthukumar, muthukumar arumugam, tamil poems, tamil poetry on ஜூலை 28, 2008 | Leave a Comment »
நான் கண்டதும்
என்னைக் கண்டதும்
நீயே.
என் இனிய தமிழ் மக்களே !!!!
Posted in சுற்றமும் நட்பும் on ஜூலை 28, 2008 | 1 மறுமொழி »
நீண்ட நாட்களாய் வலை பதிவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.எப்படி என்ற தொழில்நுட்பம் புரிபடாதிருந்தது. மென்பொருள் துறையில் இருந்தாலும் , கணினி என்பது இன்னமும் எனக்கு பலூன்காரனை போன்று ஆச்சயர்யமும் , சிறிது தயக்கமுமகவே இருந்து வருகிறது.ஒரு வேளை அது எனக்கு அறிமுகமான விதமாக இருக்கலாம். என் வேலையிலும் சிறிதளவே பயன்பாடு கொண்டிருப்பதாலும் இருக்கலாம்.( ஆனாலும் பங்கு சந்தை பற்றி சிறிதளவு நிஜங்களையும் மிகைப்படுத்தி காட்ட உதவி இருக்கிறது… தொழில் ரீதியாக கணினி இல்லாவிடிருந்தால் என் போன்றவர்களுக்கு பங்கு [...]