சுப்ரமணியபுரம் …..
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு clean slate film. அமைதியாய் ஆரம்பித்து முடிவில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்திய படம்…ஜெய்யின் மைனர்தனங்கள், ஒரு சில பார்வைகளிலேயே வில்லத்தனம் காட்டும் சமுத்ரகனி இருவரும் மிகப்பெரிய பிளஸ் ..கஞ்சா கருப்புக்கு நிச்சயம் ஒரு மைல்கல்…
இளையராஜா வின் background பாடல்களில் கண்களில் கவிதை பாடி செல்லும் கதாநாயகி … ( இப்பொழுதெல்லாம் அந்த தாமரை பூ டாலர் வைத்த செயின் யாரும் செய்வதில்லையா இல்லை யாரும் அணிவதில்லையா ??).. அழகு ….
பரமனாக வரும் டைரக்டர் ….பாரதிராஜாவிடம் இருந்து வந்த இயக்குனர்களை போல ; இப்பொழுது பாலாவிடம் இருந்து … கிளைமாக்ஸ் ஆக்ரோஷம் , மனதில் அறைகிறது ……( எப்படி நம்ம சென்சார்ல விட்டாங்க …)..மிகக் கனமானதொரு அமைப்பு ….
கண்கள் இரண்டால் …. அழகானதொரு கவிதையும் நல்ல இசையும் சேர்ந்த சிறப்பு .. ( இளையராஜா எங்கே என்று தேட வைக்கிறது ….) …
பரமா, அடுத்த படம் எப்போ …..??
உளியின் ஓசை:
Field out ஆனா அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் ?? அதுக்கும் மேல படம் ஆளும் கட்சியின் அன்பு கட்டளைக்காக திரையிடப்பட்டால் ???????
பேசாம சம்மட்டி ஓசை!! னு பேர் வெச்சு இருக்கலாம் ….. trailer எ தாங்க முடியல …….தமிழின தலைவரே , விட்ருங்க ப்ளீஸ் …..