Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஆகஸ்ட், 2008 க்கான தொகுப்பு

நீண்ட நாட்களாக எனது வேலை/தொழில் பற்றி  எழுதலாம் என்று எண்ணம்.. ஒரே ஒரு சின்ன தயக்கம் தான் … நம்மள பத்தி 4 பேர் நல்லவிதமா சொல்ல மாட்டாங்க .. but  நாமளே …எப்படின்னு ….. மனதில் இருக்கும் பக்கங்கள் /புலம்பல்கள்…. 1) MBA  படிப்பும் அதன் மானக் கேடுகளும் ….( கற்றது தமிழ் மாதிரி; கற்றது MBA..) 2)கையில பை; கழுத்துல டை ; வாய்ல பொய்..

முழு பதிவையும் வாசிக்க »

சிபு சோரன் …. தமிழில் உள்ள மிக சிறந்த பத்து கெட்ட வார்த்தைகளுக்கும் பொருத்தமானவர்… காங்கிரஸ் ….இன்னும் இரண்டு கெட்ட வார்த்தைகளை சேர்த்து கொள்ளலாம் . இது போன்ற அவமான சின்னங்களை வளர்த்து விட்டதற்கும் ; வளர்த்து கொண்டிருப்பதற்கும் ….

முழு பதிவையும் வாசிக்க »

தமிழ்நாட்டில் இந்த மாதம் முதல் அனைத்து  வகை வெளிநாட்டு மது வகைகளும் அனுமதிக்கப்படும்.— தமிழக அரசுக்குறிப்பு தமிழ்நாட்டில் மத்திய அரசால் நடத்தப்படும் நவோதய பள்ளிகளுக்கு இந்த வருடமும் அனுமதி இல்லை. – தமிழக அரசுக்குறிப்பு .

முழு பதிவையும் வாசிக்க »

வேர் ..

இந்த நகரத்திலும் .. சற்று நல்லவனாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. யாருக்கேனும் விபத்தில் அடிபட்டாலும் கூட இன்னமும் கவலை பட்டு கொண்டிருக்கிறேன்… தொலைத்து விடவில்லை … எனது கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றை..

முழு பதிவையும் வாசிக்க »

மலர்ந்து நிற்கும் அம்மா பெரு மகிழ்ச்சியடையும் அப்பா.. நேசத்துடன் நலம் விசாரிக்கும் சொந்தங்கள்.. கால் சுற்றியே வரும் ரோசி ….. நூறு கதைகள் வைத்துக்கொண்டு காத்திருக்கும் கிராமம்.. எப்பொழுதாவது தான் செல்ல முடிகிறது… எதை தேடி கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை இந்த நகரத்தில்…..

முழு பதிவையும் வாசிக்க »

கால் தூக்கியே நிற்கும் யாளி போன்று தீராப் பாசத்துடன் அம்மா.. ************ நாலு வார்த்தை பேசினால் ஒன்று.. நல்லா சாப்பிடுப்பா …. அடுத்து ..உடம்ப பார்த்துக்கோ.. உனக்கு , பிள்ளைகளை தவிர வேறொன்றும் தெரியாதா அம்மா ??

முழு பதிவையும் வாசிக்க »

நீ

நீயும் நானும் நடந்து சென்ற பாதை அப்படியே உள்ளது ..நீண்டதாய் .. முடிவற்றதாய் … இன்றும் மழை தூறி கொண்டு தான் இருக்கின்றது … தேடி கொண்டிருக்கிறேன் நாம் விட்டு சென்ற சுவடுகளை.. ********* கை மூடி திறக்கும் பொழுதெல்லாம் கசிந்து கொண்டிருக்கிறது .. உன்னை பற்றிய ஏதேனும் ஒரு நினைவு… ********* அழைத்து ,மறுத்து சிரித்து பழகிய உன் ஓசை மட்டும் ஒலித்து கொண்டிருக்கிறது …… ************ வெளியேறிய காற்றில் கரைந்து  சென்றாய் அழகியதொரு சங்கீதமாய்… [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.