இந்த நகரத்திலும் ..
சற்று நல்லவனாய்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
யாருக்கேனும் விபத்தில் அடிபட்டாலும் கூட
இன்னமும் கவலை பட்டு கொண்டிருக்கிறேன்…
தொலைத்து விடவில்லை …
எனது கிராமத்தின் அடையாளங்களில் ஒன்றை..
‘கிறுக்கல்கள்’ பகுப்புக்கான தொகுப்பு
வேர் ..
Posted in கிறுக்கல்கள், குறிச்சொல் இடப்பட்டது tamil poetry on ஆகஸ்ட் 1, 2008 | Leave a Comment »
எதை தேடி???
Posted in கிறுக்கல்கள் on ஆகஸ்ட் 1, 2008 | Leave a Comment »
மலர்ந்து நிற்கும் அம்மா
பெரு மகிழ்ச்சியடையும் அப்பா..
நேசத்துடன் நலம் விசாரிக்கும் சொந்தங்கள்..
கால் சுற்றியே வரும் ரோசி …..
நூறு கதைகள் வைத்துக்கொண்டு காத்திருக்கும் கிராமம்..
எப்பொழுதாவது தான் செல்ல முடிகிறது…
எதை தேடி கொண்டிருக்கிறேன் என்று
தெரியவில்லை இந்த நகரத்தில்…..
அம்மா..
Posted in கிறுக்கல்கள் on ஆகஸ்ட் 1, 2008 | Leave a Comment »
கால் தூக்கியே நிற்கும்
யாளி போன்று
தீராப் பாசத்துடன்
அம்மா..
************
நாலு வார்த்தை பேசினால்
ஒன்று.. நல்லா சாப்பிடுப்பா ….
அடுத்து ..உடம்ப பார்த்துக்கோ..
உனக்கு , பிள்ளைகளை தவிர வேறொன்றும் தெரியாதா அம்மா ??
நீ
Posted in கிறுக்கல்கள், குறிச்சொல் இடப்பட்டது tamil poems, tamil poetry on ஆகஸ்ட் 1, 2008 | 1 மறுமொழி »
நீயும் நானும் நடந்து சென்ற
பாதை அப்படியே உள்ளது ..நீண்டதாய் .. முடிவற்றதாய் …
இன்றும் மழை தூறி கொண்டு தான் இருக்கின்றது …
தேடி கொண்டிருக்கிறேன் நாம் விட்டு சென்ற சுவடுகளை..
*********
கை மூடி திறக்கும் பொழுதெல்லாம்
கசிந்து கொண்டிருக்கிறது ..
உன்னை பற்றிய ஏதேனும் ஒரு நினைவு…
*********
அழைத்து ,மறுத்து சிரித்து பழகிய
உன் ஓசை மட்டும் ஒலித்து கொண்டிருக்கிறது ……
************
வெளியேறிய காற்றில் கரைந்து சென்றாய்
அழகியதொரு சங்கீதமாய்…
வாசித்து முடிந்தபின் வெறும் துளைகள்
மட்டும் கொண்டதாய் எனது புல்லாங்குழல்..
*************
விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது மழை..
உனது நினைவுகளும்…
**********
நானாக
Posted in கிறுக்கல்கள், குறிச்சொல் இடப்பட்டது tamil poems, tamil poetry on ஜூலை 28, 2008 | 1 மறுமொழி »
என் கைவிட்டு தவறிய
பந்து உருண்டு உருண்டு
செல்கிறது
மீண்டும் கிடைக்கவே கிடைக்காத
பாதாளத்தில்.
இன்றும் வந்து செல்கிறது
இரண்டு சூரியன்…
விழும் கதிர்கள் என்னை
மட்டும் ஊடுருவி
என் நிழலாய்.
எனக்குள் நீ
Posted in கிறுக்கல்கள், குறிச்சொல் இடப்பட்டது muthukumar, muthukumar arumugam, tamil poems, tamil poetry on ஜூலை 28, 2008 | Leave a Comment »
நான் கண்டதும்
என்னைக் கண்டதும்
நீயே.