என் கைவிட்டு தவறிய
பந்து உருண்டு உருண்டு
செல்கிறது
மீண்டும் கிடைக்கவே கிடைக்காத
பாதாளத்தில்.
இன்றும் வந்து செல்கிறது
இரண்டு சூரியன்…
விழும் கதிர்கள் என்னை
மட்டும் ஊடுருவி
என் நிழலாய்.
கிறுக்கல்கள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது tamil poems, tamil poetry | 1 மறுமொழி »
நான் கண்டதும்
என்னைக் கண்டதும்
நீயே.
கிறுக்கல்கள் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது muthukumar, muthukumar arumugam, tamil poems, tamil poetry | Leave a Comment »
நீண்ட நாட்களாய் வலை பதிவிடலாம் என்று நினைத்து கொண்டிருந்தேன்.எப்படி என்ற தொழில்நுட்பம் புரிபடாதிருந்தது. மென்பொருள் துறையில் இருந்தாலும் , கணினி என்பது இன்னமும் எனக்கு பலூன்காரனை போன்று ஆச்சயர்யமும் , சிறிது தயக்கமுமகவே இருந்து வருகிறது.ஒரு வேளை அது எனக்கு அறிமுகமான விதமாக இருக்கலாம். என் வேலையிலும் சிறிதளவே பயன்பாடு கொண்டிருப்பதாலும் இருக்கலாம்.( ஆனாலும் பங்கு சந்தை பற்றி சிறிதளவு நிஜங்களையும் மிகைப்படுத்தி காட்ட உதவி இருக்கிறது… தொழில் ரீதியாக கணினி இல்லாவிடிருந்தால் என் போன்றவர்களுக்கு பங்கு சந்தையை சந்தைபடுத்துதல் மிக கடினமாய் இருந்திருக்கும்; மக்களுக்கும் பேராசை குறைந்திருக்கும்!!!. இது பற்றி பிற்பாடு பார்போம்.). ஆனாலும் ஆசை யாரை விட்டது. வலை பதிவு என் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தபடியால் , இளைய தளபதி (!!)விஜய் சொல்வது போல் ” என் ரசிகர்களை திருப்தி படுத்தும் நோக்கத்தை ” ராமசந்திரன் புரிந்து கொண்டு வோர்ட் பிரஸ் ஐ எளிதாக அறிமுகப்படுத்த இதோ இந்த வலை பூ என் ரசிக மகா ஜனங்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டில் கார்டு உடன் தொடங்குகிறது…
என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ; எதை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதியை விட யாரும் வீட்டுக்கு வந்து திட்டி விடவோ அடித்து விடவோ மாட்டார்கள் என்ற நம்பிக்கையுமே இந்த புரட்சிகர முடிவுக்கு காரணம். ( அது மட்டும் அல்ல , நம்ம எழுதுவதை நாமே publish செய்தால் தான் உண்டு என்ற self realization நும் காரணம்.)..
அவ்வபோது எழுதி வரும் கவிதைகளையும் , சிற்றறிவுக்கு எட்டிய அரசியலையும் அலசலாம் என்று எண்ணம் .( அரசியலில் பழம் தின்று கொட்டை( not an unparlimentary word!!) போட்டவர்கள் மன்னிக்கவும்.) bagesh சொல்வது போல methanol இன் ஆதிக்கத்திலும் எழுதலாம்.; ஆத்திகத்தை பற்றியும் ,ஸ்ரீ ல ஸ்ரீ காஞ்சி காமத்தை பற்றியும் எழுதலாம்.
பின்னூடாக என்னை பாதித்தவர்களை பற்றியும்!!!
சுற்றமும் நட்பும் இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »